Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

மூதாட்டியின் உதட்டை கடித்த வாலிபர்.. பரபரப்பு சம்பவம்

By Jayakumar
04 Jun 2025, 02:17 PM
ஜோலார்பேட்டை அருகே வாலிபர் ஒருவர் மூதாட்டியின் உதட்டை கடித்து துப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாலிபரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த வக்கணம் பட்டி பகுதியை சேர்ந்த மதியழகன் மனைவி ஜெயசுந்தரி (64). இவர் சமோசா தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

இந்த நிலையில் மூதாட்டி ஜெயசுந்தரி இன்று வேலைக்கு செல்வதற்காக ஜோலார்பேட்டை ரயில்வே நிலையம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது, விஷ்ணு (30) என்ற வாலிபர் திடீரென ஓடி வந்து மூதாட்டியின் உதட்டை கடித்து துப்பியுள்ளார். மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டதையடுத்து, அக்கம் பக்கத்தினர் விஷ்ணுவை பிடித்து தர்ம அடி கொடுத்து ஜோலார்பேட்டை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

பின்னர் மூதாட்டி ஜெய சுந்தரியை மீட்ட பொதுமக்கள், அவரை திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்த முதற்கட்ட விசாரணையில் விஷ்ணு மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்துள்ளது. மேலும் பொதுமக்கள் தாக்கியதால் காயமடைந்த விஷ்ணுவை திருப்பத்தூர் அரசு சிகிச்சைக்காக அனுமதித்தனர். அதனைத் தொடர்ந்து, அவரை ஜோலார்பேட்டை காவல் நிலையத்துக்கு போலீசார் அழைத்து சென்றனர்.

மூதாட்டியிடம் அத்துமீறி நடந்துகொண்ட வாலிபரால் ஜோலார்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.