Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

இதுக்கு இல்லையா சார் End' uh.. தங்கம் விலை சவரனுக்கு ரூ.4,120 உயர்வு!

By Christon
21 Jan 2026, 01:50 PM
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.4,120 உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் தங்கம் விலை கடந்த 48 மணி நேரமாக எவராலும் கணிக்க முடியாத அளவிற்கு "ஜெட்" வேகத்தில் உயர்ந்து வருகிறது. நேற்றைய அதிர்ச்சியில் இருந்தே மக்கள் மீளாத நிலையில், இன்று ஒரே நாளில் அடுத்தடுத்து ஏற்பட்ட இரண்டு விலை உயர்வுகள் நகைப்பிரியர்களைத் தூக்கிவாரிப் போட வைத்துள்ளது.

ஒரே நாளில் ரூ. 4,120 உயர்வு!

இன்று காலை நிலவரப்படி, தங்கம் சவரனுக்கு ரூ. 2,800 உயர்ந்து ரூ. 1,14,000-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால், மதிய நிலவரப்படி தங்கம் விலை மேலும் ஒரு அதிரடி உயர்வைச் சந்தித்தது. மதியத்திற்கு மேல் சவரனுக்கு மேலும் ரூ. 1,320 அதிகரித்துள்ளது. இதன் மூலம் இன்று ஒரே நாளில் மட்டும் தங்கம் சவரனுக்கு ரூ. 4,120 உயர்ந்து, ரூ. 1,15,320 என்ற புதிய வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளது.

கிராமுக்கு ரூ. 515 அதிகரிப்பு

நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ. 13,900-க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று அடுத்தடுத்த உயர்வுகளால் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 14,415-ஆக அதிகரித்துள்ளது. நேற்றைய ரூ. 3,600 உயர்வையும் சேர்த்தால், கடந்த 48 மணி நேரத்தில் மட்டும் தங்கம் சவரனுக்கு ரூ. 7,720 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி விலையும் உயர்வு

தங்கத்தின் விலை மதிய நேரத்தில் உயர்ந்தாலும், வெள்ளி விலையும் இன்று அதிகரித்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி ரூ. 345-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 3,45,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.