Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

'இதுக்கு இல்லையா சார் ஒரு End-uh..' தங்கம் விலை ஒரே நாளில் ரூ.1,280 உயர்வு!

By Christon
05 Jan 2026, 04:28 PM
ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,280 உயர்ந்துள்ளது.
வாரத் தொடக்க நாளான இன்று (திங்கட்கிழமை) தங்கம் விலை காலை மற்றும் மாலை என இரண்டு முறை உயர்ந்து, நகைப்பிரியர்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்குக் கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஒரே நாளில் ஒரு சவரன் தங்கம் ரூ.1,280 உயர்ந்துள்ளது.

சனிக்கிழமை நிலவரம்

கடந்த சனிக்கிழமை அன்று, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை காலையில் கிராமுக்கு ₹60 குறைந்து, ஒரு கிராம் ரூ.12,520-க்கும், ஒரு சவரன் ரூ.1,00,160-க்கும் விற்பனையானது. எனினும், மாலை நேரத்திலேயே விலை மீண்டும் அதிகரித்து, சவரனுக்கு ரூ.640 உயர்ந்து, ரூ.1,00,800-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.80 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.12,600-க்கு விற்பனையானது.

இன்று காலை நிலவரம்

வாரத் தொடக்க நாளான இன்று காலை, ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்தது. ஒரு சவரன் தங்கம் மேலும் ரூ.640 உயர்ந்து, ரூ.1,01,440-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேபோல, ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.80 அதிகரித்து, ரூ.12,680-க்கு விற்பனையானது.

மாலையில் மீண்டும் விலை ஏற்றம்

இன்று மாலை, தங்கம் விலை மீண்டும் இரண்டாவது முறையாக உயர்ந்தது. சவரன் மேலும் ரூ.640 அதிகரித்து, ஒரு சவரன் தங்கம் ரூ.1,02,080-க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.80 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.12,760-க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலையும் உயர்வு

தங்கத்தைப் போலவே வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. சனிக்கிழமை ஒரு கிராம் ரூ.257-க்கு விற்பனையான நிலையில், இன்று காலை சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.8 உயர்ந்து ரூ.265-க்கு விற்பனை ஆனது. கிலோவுக்கு ரூ.8,000 உயர்ந்து, ஒரு கிலோ வெள்ளி ரூ.2,65,000-க்கு விற்பனையாகிறது.