சர்வதேச சந்தை மாற்றங்களால் தமிழகத்தில் தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களைக் கண்டு வருகிறது. அந்த வகையில், இன்று காலை கடுமையாக உயர்ந்த தங்கம் விலை மாலையில் சற்று சரிவைச் சந்தித்துள்ளது.
கடந்த 8 ஆம் தேடி ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.13,965-க்கும், சவரனுக்கு ரூ.1,11,720-க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம் ஒன்றுக்கு ரூ.250-க்கு விற்பனையானது.
தொடர்ந்து நேற்று, தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.1,11,600-ஆகவும், கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.13,950-ஆகவும் விற்பனை செய்யப்பட்டது. அன்றைய தினம் வெள்ளி விலையில் மாற்றம் எதுவுமில்லை.
இதையடுத்து, இன்று காலையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,400 வரை உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,14,000-க்கும், கிராம் ரூ.14,250-க்கும் விற்பனையானது. ஆனால் மாலையில் சவரனுக்கு ரூ.800 வரை குறைந்ததால், ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.1,13,200-க்கும், ஒரு கிராம் ரூ.14,150-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியைப் பொறுத்தவரை, கிலோவுக்கு ரூ.10,000 உயர்ந்து ஒரு கிலோ ரூ.2,60,000-க்கும், ஒரு கிராம் ரூ.260-க்கும் விற்பனையாகி வருகிறது. மாலையில் வெள்ளி விலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.