Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

நகை பிரியர்களுக்கு ஹாப்பி நியூஸ்.. 5-வது நாளாக சரிந்த தங்கம் விலை!

By Christon
06 Mar 2026, 10:18 AM
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,280 குறைந்துள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் நிலவி வரும் சூழலில், சர்வதேசப் பொருளாதார மாற்றங்களால் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து குறைந்து வருகிறது. அந்த வகையில், இன்று சவரனுக்கு ரூ.1,280 குறைந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.1,19,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

விலை நிலவரம்: ரூ.1.20 லட்சத்திற்குக் கீழ் தங்கம்

இன்றைய விலை மாற்றத்தின்படி, ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.160 சரிந்து ரூ.14,960-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த வாரத் தொடக்கத்தில் இருந்தே சரிவைச் சந்தித்து வரும் தங்கம் விலை, கடந்த ஐந்து நாட்களில் மட்டும் ஒட்டுமொத்தமாகச் சவரனுக்கு ரூ.6,520 வரை குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தத் தொடர் சரிவு நடுத்தரக் குடும்பத்தினர் மற்றும் நகைப்பிரியர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதிரடியாகக் குறைந்த வெள்ளி விலை

தங்கத்தைப் போலவே வெள்ளியின் விலையும் இன்று கணிசமாகக் குறைந்துள்ளது. நேற்று வரை மாற்றமின்றி இருந்த வெள்ளி விலை, இன்று கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.290-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.5,000 வரை அதிரடியாகச் சரிந்து ரூ.2,90,000 என்ற விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது.