Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

திமுக நிகழ்ச்சியில் அரசு பள்ளி மாணவர்கள் – அண்ணாமலை கண்டனம்

By Jayakumar
15 Jun 2025, 04:46 PM
கட்டிட வேலை செய்ய வைப்பது, கழிப்பறைகளை கழுவச் செய்வது, பள்ளியை சுத்தம் செய்வது என, அரசுப் பள்ளி மாணவர்களைத் தொடர்ந்து மாற்றாந்தாய் மனப்பான்மையில் நடத்தி வருகிறது திமுக அரசு என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
திமுக கட்சி நிகழ்ச்சிக்கு கூட்டம் சேர்க்க, அரசுப் பள்ளி மாணவர்களைப் பயன்படுத்த முயற்சிக்கும் செயல்பாட்டினை கண்டிப்பதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

மாற்றாந்தாய் மனப்பான்மை

கட்டிட வேலை செய்ய வைப்பது, கழிப்பறைகளை கழுவச் செய்வது, பள்ளியை சுத்தம் செய்வது என, அரசுப் பள்ளி மாணவர்களைத் தொடர்ந்து மாற்றாந்தாய் மனப்பான்மையில் நடத்தி வருகிறது திமுக அரசு என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளப்பக்கத்தில், “கோவை மாவட்டம் பொள்ளாச்சி சமத்தூர் ராமஐயங்கார் நகராட்சி மேல்நிலைப்பள்ளி மாணவர்களை, நான் முதல்வன் திட்டம் என்று பொய் கூறி திமுக கட்சி நிகழ்ச்சிக்கு வர வற்புறுத்தியிருக்கிறார் அந்தப் பகுதி திமுக கவுன்சிலரின் கணவர். கட்டிட வேலை செய்ய வைப்பது, கழிப்பறைகளை கழுவச் செய்வது, பள்ளியை சுத்தம் செய்வது என, அரசுப் பள்ளி மாணவர்களைத் தொடர்ந்து மாற்றாந்தாய் மனப்பான்மையில் நடத்தி வருகிறது திமுக அரசு.

மாணவர்களை பயன்படுத்த முயற்சி

பல பள்ளிகளில் அடிப்படை வசதிகள் கூட இல்லை. இந்த நிலையில், திமுக கட்சி நிகழ்ச்சிக்கு கூட்டம் சேர்க்க, அரசுப் பள்ளி மாணவர்களைப் பயன்படுத்த முயற்சிக்கும், திமுகவின் அகங்காரச் செயல்பாட்டினை, வன்மையாகக் கண்டிக்கிறேன்” என தெரிவித்துள்ளார். முன்னதாக கோவில் படத்தில் வரும் வடிவேலு நகைச்சுவையை போல, மத்திய அரசின் திட்டங்களுக்கெல்லாம், இது போன்ற நாச்சியப்பன் கடையில், திமுகவின் பெயரைப் பொறித்து மக்களை ஏமாற்றி வந்தது இனியும் நடக்காது என திமுகவை கடுமையாக அண்ணாமலை விமர்சிருந்தது குறிப்பிடத்தக்கது