தமிழ்நாடு

தங்கம் விலை அதிரடி உயர்வு: ஒரு சவரன் ரூ. 1.12 லட்சத்தைக் கடந்தது!

By Christon
01 Apr 2026, 10:16 AM
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.3,040 உயர்ந்துள்ளது.
கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட தங்கம் விலை, இன்று அதிரடியாக உயர்ந்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் 1.12 லட்சம் ரூபாயைத் தாண்டி விற்பனையாவது நகைப்பிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சர்வதேசச் சந்தையில் நிலவும் பொருளாதார மாற்றங்கள் மற்றும் போர்த் தட்டுப்பாடுகள் காரணமாகத் தங்கம் விலை கடந்த ஒரு வாரமாக நிலையற்ற தன்மையில் இருந்து வந்தது. மார்ச் 24 வரை குறைந்து வந்த விலை, பின்னர் படிப்படியாக உயரத் தொடங்கியது. நேற்று தங்கம் விலை சற்றே குறைந்திருந்த நிலையில், இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 3,040 உயர்ந்துள்ளது.

இன்றைய விலை நிலவரம்

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 380 உயர்ந்து, ஒரு கிராம் ரூ. 14,050-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 1,12,400 என்ற புதிய வரலாற்று உச்சத்தை எட்டியுள்ளது. நேற்று ஒரு சவரன் ரூ. 1,09,360-க்கு விற்பனையானது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி விலை ஏற்றம்

தங்கத்தைத் தொடர்ந்து வெள்ளி விலையும் இன்று கணிசமாக உயர்ந்துள்ளது. வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ. 15 உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ. 265-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ. 2,65,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.