தமிழ்நாடு

விண்ணை முட்டும் தங்கம் விலை.. ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 2,560 உயர்வு!

By Christon
12 Dec 2025, 03:50 PM
ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 2,560 உயர்ந்துள்ளது
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் இரண்டாவது முறையாக உயர்ந்து, புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. இன்று ஒரே நாளில் மட்டும் சவரனுக்கு மொத்தம் ரூ. 2,560 உயர்ந்துள்ளது.

தங்கத்தின் அபரிமிதமான விலை உயர்வு

இன்று காலை வர்த்தகத்தில் தங்கம் விலை வரலாறு காணாத வகையில் சவரனுக்கு ரூ.1,600 உயர்ந்து ரூ.98,000-க்கும், கிராமுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.12,250-க்கும் விற்பனையானது. இந்த நிலையில், இன்று பிற்பகல் வர்த்தகம் நிறைவடையும் தருவாயில் தங்கம் விலை இரண்டாவது முறையாக மீண்டும் உயர்வைக் கண்டது.

சவரனுக்கு மேலும் ரூ.960 உயர்ந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.98,960-க்கும், கிராமுக்கு ரூ.120 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.12,370-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரே நாளில் ஏற்பட்ட இந்த அதிரடி உயர்வு, தங்கம் விலையைச் சென்னையில் புதிய உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது.

வெள்ளி விலையும் உச்சத்தில்

தங்கத்தை போலவே வெள்ளி விலையும் இன்று உச்சத்தை எட்டியுள்ளது. அதன்படி, வெள்ளி விலை இன்று இரண்டாவது முறையாக, கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.216-க்கும், ஒரு கிலோவுக்கு ரூ.1,000 உயர்ந்து ரூ.2.16 லட்சத்துக்கும் விற்பனையாகிறது. தங்கம் மற்றும் வெள்ளி ஆகிய இரு உலோகங்களின் விலையும் இன்று புதிய உச்சத்தில் விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.