தமிழ்நாடு

தங்கம் விலை ஒரே நாளில் இருமுறை உயர்வு.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!

By Christon
06 Nov 2025, 05:18 PM
ஆபரண தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் ரூ. 1,120 ஏற்றம் கண்டுள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த நிலையில், இன்று ஒரே நாளில் ரூ.1,120 உயர்ந்து, வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய விலை நிலவரம்

கடந்த 1-ஆம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.90,480-க்கு விற்பனையானது. அதனைத் தொடர்ந்து, கடந்த 4 ஆம் தேதி சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ.90,000-க்கும், நேற்று மீண்டும் ரூ.560 குறைந்து ரூ.89,440-க்கும் விற்பனையானது.

இன்றைய விலை நிலவரம்

இன்று காலை வர்த்தகம் தொடங்கியபோது, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.11,250-க்கும், சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.90,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், மாலை வர்த்தகம் நிறைவடையும் தருவாயில், தங்கம் விலை மீண்டும் ஒருமுறை உயர்ந்துள்ளது.

தங்கம் கிராமுக்கு மேலும் ரூ.70 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.11,320-க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு மேலும் ரூ.560 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.90,560-க்கு விற்பனையாகிறது. இதன் மூலம், ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு மொத்தம் ரூ.1,120 (ரூ.560 + ரூ.560) உயர்ந்துள்ளது.

வெள்ளி விலை உயர்வு

தங்கத்தைப் போலவே வெள்ளியின் விலையும் இன்று உயர்ந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு ரூ.2 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.165-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.2,000 உயர்ந்து, தற்போது ரூ.1.65 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.