சென்னையில் கடந்த சில நாட்களாகத் தங்கம் விலை ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வரும் நிலையில், இன்றைய தினமும் ஆபரணத் தங்கத்தின் விலை சற்று உயர்வைக் கண்டுள்ளது.
தங்கத்தின் விலை கடந்த 27-ஆம் தேதி முதல் தொடர்ந்து சரிவைக் கண்டு வந்தது. அதன்படி, நேற்று முன்தினம் கிராமுக்கு ரூ.60-ம், சவரனுக்கு ரூ.480-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.13,155-க்கும், ஒரு சவரன் ரூ.1,05,240-க்கும் விற்பனையானது. அதனைத் தொடர்ந்து, நேற்று விலை உயர்ந்து கிராமுக்கு ரூ.75 அதிகரித்து ரூ.13,230-க்கும், சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ரூ.1,05,840-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. அதன்படி, தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,06,040-க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.13,255-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அதேவேளையில், வெள்ளியின் விலையில் இன்று எவ்வித மாற்றமும் இன்றி நேற்றைய நிலையிலேயே நீடிக்கிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.235-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,35,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.