இஸ்ரேல் - ஈரான் போர் பதற்றம் மற்றும் உலகளாவிய பொருளாதார மாற்றங்களால், தங்கம் மற்றும் வெள்ளி விலையில் இன்று அதிரடி உயர்வு ஏற்பட்டு நகை வாங்குவோரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சர்வதேசச் சந்தையில் நிலவும் போர்ப்பதற்றம் மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு போன்ற காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே உள்ளது. நேற்று சற்று உயர்ந்து காணப்பட்ட தங்கம் விலை, இன்று சவரனுக்கு ரூ.800 அதிகரித்துள்ளது. இதனால் நகைப்பிரியர்கள் மற்றும் இல்லத்தரசிகள் பெரும் கவலையடைந்துள்ளனர்.
தங்கம் விலை நிலவரம்
சென்னையில் இன்றைய நிலவரப்படி, ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ரூ.14,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக, ஒரு சவரன் தங்கத்தின் விலையில் ரூ.800 அதிகரித்து, அதன் விற்பனை விலை ரூ.1,14,560 ஆக உயர்ந்துள்ளது.
வெள்ளி விலை கிடுகிடு உயர்வு
தங்கத்தைப் போலவே வெள்ளி விலையும் இன்று வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. ஒரு கிலோ வெள்ளிக்கு ஒரே நாளில் ரூ.10,000 அதிகரித்து, ரூ.2,75,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.10 உயர்ந்து, ரூ.275-க்கு விற்பனையாகிறது.