தமிழ்நாடு

தங்கம் விலை அதிரடி உயர்வு.. சவரனுக்கு ரூ.1,960 அதிகரிப்பு!

By Christon
14 Oct 2025, 09:57 AM
தங்கம் விலை இன்று ஒரே நாளில் ரூ.1,960 உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்குத் தொடர்ந்து உயர்ந்துவரும் நிலையில், இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 1,960 அதிரடியாக உயர்ந்து ரூ. 94,600 என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது. வெள்ளி விலையும் கிலோவுக்கு ரூ. 9,000 உயர்ந்து அதிர்ச்சி அளித்துள்ளது.

தங்கத்தின் விலை நிலவரம்

கடந்த சில நாள்களாகக் காலை, மாலை என இரு நேரங்களில் விலை மாற்றத்தைச் சந்தித்து வரும் தங்கம், கடந்த அக்டோபர் 7ஆம் தேதி ரூ. 90,000-ஐக் கடந்தது. நேற்று (அக். 13) ஒரு சவரன் ரூ. 640 உயர்ந்து ரூ. 92,640-க்கு விற்பனையானது.

இன்றைய அதிரடி உயர்வு

இன்று காலை நிலவரப்படி, ஒரு சவரன் தங்கம் ரூ. 1,960 உயர்ந்து ரூ. 94,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிராம் தங்கம் ரூ. 245 உயர்ந்து ரூ. 11,825-க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலை புதிய உச்சம்

தங்கம் விலையைப் போலவே, வெள்ளி விலையும் இன்று காலை அதிரடியாக உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 9 உயர்ந்து, ஒரு கிராம் ரூ. 206-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிலோவுக்கு ரூ. 9,000 உயர்ந்து, ஒரு கிலோ வெள்ளி ரூ. 2,06,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

பண்டிகைக் காலத்தில் தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர்ந்து வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்து வருவது வாடிக்கையாளர்களைக் கவலையடைய செய்துள்ளது. சர்வதேச சந்தையில் ஏற்படும் பொருளாதார மாற்றங்கள், டாலரின் மதிப்பு மற்றும் உலகளாவிய சந்தை நிலவரங்களே இந்தக் தொடர்ச்சியான விலை உயர்வுக்குக் காரணம் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.