Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

மீண்டும் உயர்ந்த தங்கம் விலை: சவரன் ரூ. 1.06 லட்சத்தைக் கடந்து விற்பனை!

By Christon
17 Jan 2026, 10:01 AM
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்துள்ளது.
கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட தங்கத்தின் விலை, இன்று மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது. கடந்த நான்கு நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ. 3,120 வரை உயர்ந்திருந்த தங்கம் விலை, நேற்று சற்று குறைந்திருந்தது. ஆனால், அந்த மகிழ்ச்சி நீடிக்காத வண்ணம் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 400 உயர்ந்துள்ளது.

ஆபரணத் தங்கத்தின் இன்றைய நிலவரம்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 50 அதிகரித்து, ஒரு கிராம் ரூ. 13,280-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக, ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 400 உயர்ந்து, ஒரு சவரன் ரூ. 1,06,240-க்கு விற்பனையாகிறது. இந்தத் திடீர் விலை உயர்வு நகை வாங்குவோரிடையே சற்று கவலையை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளி விலையிலும் அதிரடி மாற்றம்

தங்கத்தின் விலையைப் போலவே வெள்ளி விலையும் இன்று கணிசமாக உயர்ந்துள்ளது. நேற்று கிராமுக்கு ரூ. 4 குறைந்திருந்த வெள்ளி விலை, இன்று மீண்டும் ரூ. 4 அதிகரித்து ஒரு கிராம் ரூ. 310-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிலோ கணக்கில் பார்க்கும்போது, ஒரே நாளில் ரூ. 4,000 அதிகரித்து ஒரு கிலோ வெள்ளி ரூ. 3,06,000-க்கு விற்பனையாகிறது.