தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், இன்று (ஜனவரி 5) மீண்டும் விலை அதிகரித்துள்ளது. ஒரு சவரன் தங்கம் ரூ.1,01,440-க்கு விற்பனையாகி நகைப்பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்
நேற்று முன்தினம் (ஜனவரி 3) காலை விலை குறைந்தாலும், மாலையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.80 உயர்ந்து, ரூ.12,600-க்கு விற்பனை ஆனது. இதன் மூலம் ஒரு சவரன் தங்கம் ரூ.1,00,800-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை மேலும் ரூ.80 உயர்ந்து, ரூ.12,680-க்கு விற்பனையாகிறது. இதன் காரணமாக, ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.640 உயர்ந்து, தற்போது ரூ.1,01,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை அதிகரிப்பு
தங்கத்தைப் போலவே வெள்ளி விலையும் இன்று கணிசமாக உயர்ந்துள்ளது. நேற்று முன்தினம் ஒரு கிலோ வெள்ளி ரூ.2,57,000-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.8 உயர்ந்து, ரூ.265-க்கு விற்பனையாகிறது. இதன் மூலம் ஒரு கிலோ வெள்ளி ரூ.8,000 உயர்ந்து, தற்போது ரூ.2,65,000-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தங்கம் மற்றும் வெள்ளி விலையில் ஏற்பட்டுள்ள இந்தத் தொடர் விலை உயர்வு, சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.