தமிழ்நாடு

காலையில் குறைந்த தங்கம் விலை.. மாலையில் அதிரடி உயர்வு!

By Christon
14 Aug 2026, 07:45 PM
சென்னையில் இன்று காலை குறைந்த தங்கம் விலை மாலையில் மீண்டும் ஏற்றம் கண்டுள்ளது.
சென்னையில் இன்று (ஆகஸ்ட் 14) ஆபரணத் தங்கத்தின் விலை மாலையில் ஏற்றத்தைக் கண்டுள்ளது. கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்று காலையில் சவரனுக்கு ரூ.1,440 குறைந்திருந்த ஆபரணத் தங்கம், மாலையில் சவரனுக்கு ரூ.1,280 உயர்ந்து ரூ.1,13,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், கிராமுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.14,200-க்கு விற்பனையாகிறது.

அதேசமயம், வெள்ளியின் விலையில் எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் வெள்ளி ரூ.255-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.2,55,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சர்வதேச அளவிலான பொருளாதாரம் மற்றும் அரசியல் சூழல், கச்சா எண்ணெய் விலை நிலவரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடுகளின் அளவு மற்றும் உலகப் பங்குச் சந்தை ஆகியவற்றின் அடிப்படையிலேயே தங்கத்தின் விலை நாள்தோறும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.