சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று மாலை வர்த்தகம் நிறைவடையும் தருவாயில் மீண்டும் உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இன்று மாலை நிலவரப்படி, தங்கம் சவரனுக்கு ரூ. 560 அதிகரித்து, ஒரு சவரன் ரூ. 87,600-க்கு விற்பனையாகிறது.
தொடரும் விலை ஏற்றம்
இந்த மாதம் தொடக்கம் முதலே தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது. கடந்த செப்டம்பர் 23-ஆம் தேதி, தங்கம் விலை சவரன் முதல் முறையாக ரூ. 85,120-க்கு விற்பனையாகி வரலாறு காணாத உச்சத்தைப் பதிவு செய்தது. தொடர்ந்து ஏறுமுகமாக இருந்த தங்கம் விலை, கடந்த 29 ஆம் தேதி ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்து சவரன் ரூ. 86,160-க்கு விற்பனையானது. மேலும், நேற்று (அக்.01) இரு முறை உயர்ந்து சவரன் ரூ. 87,600-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இன்றைய விலை நிலவரம்
இன்று காலை தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 560 குறைந்து, ரூ. 87,040-க்கு விற்பனையானது. ஆனால், மாலை வர்த்தகத்தில் மீண்டும் விலை உயர்ந்து, சவரனுக்கு ரூ. 560 அதிகரித்து ரூ. 87,600-க்கு விற்பனையாகிறது. இதன்மூலம், ஒரு கிராம் தங்கம் ரூ. 10,950-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச சந்தையில் ஏற்படும் பொருளாதார மாற்றங்கள், டாலரின் மதிப்பு மற்றும் உலகளாவிய சந்தை நிலவரங்களே இந்தத் தொடர்ச்சியான விலை உயர்வுக்குக் காரணம் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.