தமிழ்நாடு

தொடர்ந்து 3-வது நாளாக சரிந்தது தங்கம் விலை.. நகைப்பிரியர்கள் ஹேப்பி!

By Christon
08 Jul 2026, 10:32 AM
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்துள்ளது.
சென்னையில் கடந்த சில நாட்களாக உச்சத்தில் இருந்த தங்கத்தின் விலை, வாரத்தின் தொடக்கத்தில் இருந்தே தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருகிறது. இன்று மூன்றாவது நாளாகவும் விலை கணிசமாகக் குறைந்துள்ளதால் நகைப் பிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தங்கம் விலை

கடந்த வாரம் முழுவதும் ஏறுமுகமாக இருந்த தங்கம் விலை, இந்த வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை சவரனுக்கு ரூ.1,120, நேற்று செவ்வாய்க்கிழமை ரூ.1,280 அதிரடியாகக் குறைந்தது. அந்தத் தொடர் வீழ்ச்சியின் நீட்சியாக, இன்று (ஜூலை 8, புதன்கிழமை) ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு மேலும் ரூ.560 குறைந்துள்ளது.

இதன் மூலம் சென்னையில் இன்று ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.1,06,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில் கிராமுக்கு ரூ.70 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.13,330-க்கு விற்பனையாகிறது. இந்தத் தொடர் சரிவு நடுத்தரக் குடும்பங்களுக்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளது.

வெள்ளி விலை

தங்கத்தின் விலையைப் பின்பற்றி இன்று வெள்ளியின் விலையும் சற்று சரிவைக் கண்டுள்ளது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.245-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு கிலோ கட்டி வெள்ளியின் விலை ரூ.5,000 குறைந்து, இன்று ரூ.2,40,000 லட்சம் என்ற விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.