தமிழ்நாடு

இரண்டாவது நாளாக சரிந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி!

By Christon
29 Apr 2026, 10:10 AM
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,200 குறைந்துள்ளது.
தங்கத்தின் விலை இரண்டாவது நாளாக சரிவை சந்தித்துள்ளது. சவரனுக்கு ரூ.1200 குறைந்திருப்பது நகைப்பிரியர்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.

சர்வதேச சந்தையின் அடிப்படையில் தங்கத்தின் விலை நாள்தோறும் மாற்றி அமைக்கப்படுகிறது. அந்த வகையில் தங்கம் கடந்த சில மாதங்களாக புதிய உச்சத்தை தொட்டு, சவரன் ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனை ஆகி வருகிறது. ஈரான் போர் பதற்றம் காரணமாக தங்கம் ஏற்றம் இறக்கத்துடன் காணப்படுகிறது.

சென்னையில் நேற்றைய தினம் தங்கம் சவரனுக்கு ரூ. 1040 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,12,800-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.130 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.14,100-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதே போன்று வெள்ளியும் கிராமுக்கு ரூ.5 குறைந்து, ஒரு கிராம் ரூ.265-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிலோவிற்கு ரூ. 5 ஆயிரம் குறைந்து, ஒரு கிலோ தங்கம் ரூ.2,65,000-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், சென்னையில் இன்று தங்கம் சவரனுக்கு ரூ.1200 குறைந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.1,11,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.150 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.13,950-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை மாற்றமின்றி கிராம் ரூ.265-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை 2-வது நாளாக சரிவை சந்தித்து இருப்பது நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.