தமிழ்நாடு

தொடர்ந்து 4-வது நாளாக சரிந்தது தங்கம் விலை: நகைப்பிரியர்கள் ஹேப்பி!

By Christon
09 Jul 2026, 10:30 AM
சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்துள்ளது.
சென்னையில் கடந்த சில நாட்களாகவே ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருகிறது. வாரத்தின் தொடக்கத்தில் இருந்தே சரிந்து வரும் தங்கம் விலை, இன்று நான்காவது நாளாகவும் குறைந்துள்ளதால் நகைப் பிரியர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியையும் ஆறுதலையும் ஏற்படுத்தியுள்ளது.

தொடர் வீழ்ச்சியில் தங்கம்

கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்ட நிலையில், இந்த வாரத்தின் தொடக்கத்தில் இருந்தே கணிசமாகக் குறைந்து வருகிறது. திங்கள்கிழமை சவரனுக்கு ரூ.1,120, செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ.1,280 அதிரடியாகக் குறைந்தது. அதனைத் தொடர்ந்து, நேற்று புதன்கிழமை காலையில் ரூ.560 குறைந்து, பின்னர் மாலையில் மேலும் ரூ.640 என ஒரே நாளில் மொத்தம் ரூ.1,200 வரை சரிந்தது.

அந்தத் தொடர் சரிவின் நீட்சியாக, இன்று (ஜூலை 9) ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு மேலும் ரூ.240 குறைந்துள்ளது. இதன் மூலம் சென்னையில் இன்று ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.1,05,760-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில் கிராமுக்கு ரூ.30 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.13,220-க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலை

தங்கத்தின் விலை தொடர்ந்து சரிந்து வரும் அதே வேளையில், இன்று வெள்ளியின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே நீடிக்கிறது. சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.245-க்கும், தொழில்துறை பயன்பாட்டிற்கான ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.2,45,000 லட்சம் என்ற விலையிலும் எவ்வித மாற்றமுமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.