Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

Gold rate: மக்களுக்கு சற்று ஆறுதல் தந்த தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.2,200 குறைவு!

By nagalekshmi
23 Apr 2025, 10:25 AM
தங்கம் விலை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்து கொண்டே சென்ற நிலையில் இன்று விலை குறைந்துள்ளதால் நகைப்பிரியர்கள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர்.
கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை பேரதிர்ச்சியை தரும் அளவிற்கு உயர்ந்து வருகிறது. இந்த மாதத்தின் தொடக்கத்தில் தங்கம் விலை சட்டென உயர்ந்து 70,000 ரூபாயை கடந்து பொதுமக்களுக்கு அதிர்ச்சி அளித்தது. இதையடுத்து, நேற்று ரூ. 75 ஆயிரத்தை நெருங்கி இனி மேல் தங்கமே வாங்க முடியாது என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது.

ஒரு கால கட்டம் வரை நடுத்தர மக்களும் தங்கம் வாங்கும் அளவிற்கு அதன் விலை இருந்தது. ஆனால், கடந்த சில நாட்களாக நடுத்தர மக்கள் தங்கம் வாங்குவது குறித்து நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு விலை எகிறி கொண்டே வருகிறது. இந்நிலையில், இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,200 குறைந்துள்ளதால் நகைப்பிரியர்கள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர்.

தங்கம் விலை குறைவு

சென்னையில் நேற்றைய நிலவரப்படி, ஒரு கிராம் தங்கம் ரூ. 275 அதிகரித்து ரூ. 9,290-க்கு விற்பனையானது. ஒரு சவரன் ரூ. 2,200 அதிகரித்து ரூ. 74,320-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளியின் விலையானது 1 கிராம் ரூ.111 ஆகவும் ஒரு கிலோ ரூ. 1,11,000-ஆகவும் விற்பனையானது.

இன்றைய நிலவரப்படி, ஒரு கிராம் தங்கம் ரூ. 275 குறைந்து ரூ. 9,015-க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் ரூ.2,200 குறைந்து ரூ. 72,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இன்றி விற்பனையாகிறது.