தமிழ்நாடு

தங்கம் விலை மீண்டும் சரிவு.. வெள்ளி விலையில் மாற்றமில்லை!

By Christon
12 Feb 2026, 10:08 AM
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,520 குறைந்துள்ளது.
சென்னையில் கடந்த சில மாதங்களாகவே தங்கத்தின் விலை புதிய உச்சங்களைத் தொட்டு வருகிறது. முன்னெப்போதும் இல்லாத வகையில், சவரன் விலை ஆயிரக்கணக்கில் உயர்ந்து நகைப்பிரியர்களுக்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது.

நேற்றைய தங்கம் விலை நிலவரம்

நேற்றைய தினம் தங்கம் சவரனுக்கு ரூ.160 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,16,800-க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு ரூ.20 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.14,600-க்கு விற்பனை ஆனது.

அதே போன்று நேற்றைய தினம் மாலையில் மீண்டும் தங்கம் சவரனுக்கு ரூ.1,520 உயர்ந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.1,18,320 விற்பனை ஆகிறது. கிராமுக்கு ரூ.190 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.14,790-க்கு விற்பனை ஆகிறது. வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல், கிராம் ரூ.300 விற்பனை ஆகிறது.

தங்கம் விலை சரிவு

இன்றைய தினம் தங்கம் சவரனுக்கு ரூ.1,520 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,16,800 குறைந்து விற்பனை ஆகிறது. கிராமுக்கு ரூ.190 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த மூன்று தினங்களாக ஒரு கிராம் வெள்ளி ரூ. 300-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 3 லட்சம் என்ற நிலையிலேயே மாற்றமின்றி விற்பனை ஆகி வருகிறது.