கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து உயர்ந்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை, சென்னையில் இன்று (ஜூலை 24) சவரனுக்கு ரூ.2,160 குறைந்துள்ளது. இதனால் நகைப்பிரியர்கள் மற்றும் பொதுமக்கள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர்.
தங்கம் விலை
சென்னையில் கடந்த சில வாரங்களாகவே தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வந்தது. குறிப்பாக இந்த வார தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது.
இந்நிலையில், நான்கு நாட்களுக்குப் பிறகு இன்று தங்கம் விலை அதிரடியாகக் குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,160 குறைந்து ஒரு சவரன் ரூ.1,05,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் கிராமுக்கு ரூ.270 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.13,230-க்கு விற்பனையாகிறது.
வெள்ளி விலை
தங்கத்தின் விலையைப் போலவே வெள்ளி விலையும் இன்று கணிசமாகக் குறைந்துள்ளது. வெள்ளி கிலோவுக்கு ரூ.5,000 குறைந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.240-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.2,40,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.