கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கத்தின் விலை, வாரத்தின் இரண்டாவது நாளான இன்றும் அதிரடியாகக் குறைந்துள்ளதால் பொதுமக்கள் மற்றும் நகைப் பிரியர்கள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தங்கம் விலை
இந்த மாதத் தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்தது. ஜூலை 3-ஆம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.1,09,600 என்ற உச்சத்தைத் தொட்டது. அதனைத் தொடர்ந்து, நேற்று சவரனுக்கு ரூ.1,120 குறைந்திருந்த நிலையில், இன்று (ஜூலை 7) மீண்டும் சவரனுக்கு ரூ.1,280 அதிரடியாகக் குறைந்துள்ளது. இதன் மூலம் சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.1,07,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில் கிராமுக்கு ரூ.160 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.13,400-க்கு விற்பனையாகிறது.
வெள்ளி விலை
தங்கத்தின் விலை கடந்த இரண்டு நாட்களாக விறுவிறுவெனக் குறைந்து வரும் வேளையில், வெள்ளியின் விலை இன்று எவ்வித மாற்றமுமின்றி நிலையாக உள்ளது. சென்னையில் இன்று சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.250-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.2,50,000 லட்சம் என்ற விலையிலும் மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.