தமிழ்நாடு

தங்கம் விலை கிடுகிடு உயர்வு.. நகை பிரியர்கள் கவலை!

By Christon
14 May 2026, 10:20 AM
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்துள்ளது.
தமிழகச் சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்து நிலையற்ற தன்மையுடன் ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வரும் நிலையில், இன்று மீண்டும் விலை உயர்ந்துள்ளது நகைப்பிரியர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அரசின் இறக்குமதி வரி உயர்வு மற்றும் உலகளாவிய சூழல்களால் கடந்த சில நாட்களாகத் தங்கத்தின் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிரடி மாற்றங்களைச் சந்தித்து வருகிறது. நேற்று காலையில் அதிரடியாக விலை உயர்ந்த நிலையில், மாலையில் கணிசமாகக் குறைந்திருந்தது. இருப்பினும், இன்று வர்த்தகம் தொடங்கியவுடன் மீண்டும் விலை ஏறுமுகத்தில் இருப்பது சாமானியர்களுக்குப் பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

நேற்று மாலையில் ஒரு சவரன் தங்கம் ரூ.1,20,000-க்கு விற்பனையான நிலையில், இன்று சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.1,20,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு கிராம் தங்கம் ரூ.50 அதிகரித்து ரூ.15,050 என்ற விலையில் விற்பனையாகிறது.

தங்கத்தைப் போலவே வெள்ளியின் விலையும் இன்று அதிகரித்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.5 உயர்ந்து ரூ.315-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.5,000 அதிகரித்து ரூ.3,15,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெளிநாடுகளில் இருந்து தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதியைக் குறைக்கும் அரசின் நடவடிக்கைகளால், வரும் நாட்களில் விலையில் இன்னும் பல மாற்றங்கள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.