தமிழ்நாட்டில் தொடர் விலை ஏற்றத்தை கண்டுவந்த தங்கம் விலை எதோ மக்கள் பாவம் என நினைப்பது போல் ரூ.120 ரூபாய் குறைந்துள்ளது.
கடந்த ஐந்து நாட்களாக தங்கம் விலை 'டாப்' கியரில் எகிறி சென்றுகொண்டிருந்தது. குறிப்பாக, கடந்த 5-ஆம் தேதி அன்று ஒரேய நாளில் பவுனுக்கு ரூ.2,240 உயர்ந்திருந்தது. நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,11,720-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.65 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13,985-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இன்றும் தங்கம் விலை ஏற்றமடைய போகிறது என்று மக்கள் அச்சப்பட்ட நிலையில், எதோ மக்கள் பாவம் போனால் போகட்டும் என்பதுபோல் சவரனுக்கு ரூ.520 உயர்த்திய நிலையில் இன்று அதில் பாதிக்கூட அல்லாமல் சவரனுக்கு ரூ.120 குறைத்துள்ளது. இன்றைய தினம், சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் ரூ.1,11,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.15 குறைந்து ஒரு கிராம் ரூ.13,950-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதனையடுத்து, வெள்ளி விலையில் இன்றும் மாற்றம் இல்லை. ஒரு கிராம் ரூ.250-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் விற்கப்பட்டது.
தங்கம் ஏறிக்கொண்டிருந்த நிலையில் இன்று ரூ.120 குறைந்ததை நினைத்து சந்தோச படுவதா இல்லை நான்கு நாட்களாக தங்கம் விலை உயர்ந்து உச்சம் தொட்டதை நினைத்து கவலைப்படுவதா என சமூக வலைத்தளங்களில் பெண்கள் மற்றும் நகை பிரியர்கள் விவாதித்து வருகின்றனர்.