தமிழ்நாடு

Gold Price: நகைப்பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. தங்கம் விலை சவரனுக்கு ரூ.4,910 சரிவு!

By Christon
31 Aug 2026, 10:42 AM
சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை சரிவை கண்டுள்ளது.
மாத தொடக்கத்தில் இருந்து ஏற்ற, இறக்கங்களைச் சந்தித்து வந்த தங்கத்தின் விலை, கடந்த சில வாரங்களாகக் கடுமையாக உயர்ந்து உச்சத்தைத் தொட்ட நிலையில், தற்போது தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருகிறது.

ஆகஸ்ட் தொடக்கத்தில் ஒரு சவரன் ரூ.1,05,760-க்கு விற்பனையான தங்கம், ஆகஸ்ட் 6-க்குப் பிறகு வேகமாகக் உயரத் தொடங்கி, ஆகஸ்ட் 24 அன்று ஒரு சவரன் ரூ.1,20,240 வரை விற்பனையானது.

அதன்பின்னர் விலை படிப்படியாகக் குறையத் தொடங்கியது. ஆகஸ்ட் 27 அன்று சவரனுக்கு ரூ.2,280-ம், அதைத் தொடர்ந்து சவரனுக்கு ரூ.2,360-ம் சரிந்து ஆகஸ்ட் 29 அன்று ஒரு சவரன் ரூ.1,16,040-க்கு வர்த்தகமானது.

வாரத்தின் தொடக்க நாளான இன்றும் தங்கம் விலை மேலும் சரிவைக் கண்டுள்ளது. அதன்படி, கிராமுக்கு ரூ.135 குறைந்து ஒரு கிராம் ரூ.14,370-க்கும், சவரனுக்கு ரூ.1,080 குறைந்து ஒரு சவரன் ரூ.1,14,960-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஆகஸ்ட் 22-ஆம் தேதியில் இருந்து கணக்கிட்டால், தங்கம் விலை சவரனுக்கு ரூ.4,910 வரை குறைந்துள்ளது.

அதேவேளையில், வெள்ளியின் விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.260-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,60,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.