தமிழ்நாடு

ரூ.94,000-ஐ கடந்த தங்கம் விலை... வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!

By Christon
26 Nov 2025, 10:18 AM
ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.640 உயர்ந்துள்ளது.
கடந்த சில வாரங்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில், நேற்று (நவம்பர் 25) ஏற்பட்ட அதிரடி உயர்வைத் தொடர்ந்து, இன்றும் தங்கம் விலை மீண்டும் உயர்ந்து ஒரு சவரன் ரூ.94,000-ஐ கடந்துள்ளது. இந்த தொடர் விலை ஏற்றதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்த்துள்ளனர்.

தொடர்ச்சியான விலை உயர்வு நிலவரம்

நேற்று முன்தினம் (நவம்பர் 24) ஒரு கிராம் ரூ.11,520-க்கும், ஒரு சவரன் ரூ.92,160-க்கும் விற்பனை ஆனது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.200-ம், சவரனுக்கு ரூ.1,600-ம் உயர்ந்து, ஒரு சவரன் ரூ.93,760-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதன் மூலம் தங்கம் மீண்டும் ரூ.93 ஆயிரத்தைக் கடந்திருந்தது.

இன்றைய தங்கம் விலை

இந்த நிலையில், இன்றும் தங்கம் விலை மேலும் உயர்ந்துள்ளது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.80 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.11,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.640 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.94,400-க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளியின் விலையும் இன்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு ரூ.2 உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.176-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிலோவுக்கு ரூ.2,000 உயர்ந்து, பார் வெள்ளி ஒரு கிலோ ரூ.1,76,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.