சென்னை மவுலிவாக்கம் பகுதியில் 17 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை அடுத்த மவுலிவாக்கம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர், பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெறாத விரக்தியில் அண்மையில் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். மகளைக் காணாமல் பெற்றோர் பல இடங்களில் தேடி வந்துள்ளனர்.
அதிர்ச்சி வாக்குமூலம்
இந்த நிலையில், வீட்டிக்குத் திரும்பிய அந்தப் சிறுமி, தனது நண்பர்கள் தங்கியிருந்த அறைக்குத் தன்னை அழைத்துச் சென்றதாகவும், அங்கு அவர்கள் போதையில் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனடியாக அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
போலீசார் தீவிர விசாரணை
இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் மௌலிவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகார் தற்போது போரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டு, மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குற்றவாளிகளைப் பிடிக்க போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று முதற்கட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.