தமிழ்நாடு

போக்சோ வழக்கில் தலைமறைவாக இருந்த மத போதகர் ஜான் ஜெபராஜ் கைது!

By VASUKI
13 Apr 2025, 09:38 AM
கோவையில் இரு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக ஜான் ஜெபராஜ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக இருந்த மத போதகர் ஜான் ஜெபராஜ் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தென்காசி மாவட்டம் சாம்பார் வடகரை பகுதியைச் சேர்ந்தவர் மத போதகர் ஜான் ஜெபராஜ் (வயது 35). இவர் கோவை ஜி. என். மில்ஸ தற்போது வசித்து வருகிறார். மேலும் கோவையில் மத போதகராகவும் கிறிஸ்தவ பாடல்களை பாடி பிரசங்கம் செய்து பிரபலமாகவும் இருந்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த வருடம் மே மாதம் 21 ஆம் தேதி அவரது வீட்டில் நடந்த கிறிஸ்தவ நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற 2 சிறுமிகளை பாலியல் தொந்தரவு செய்ததாக ஜான் ஜெபராஜ் மீது அந்த சிறுமிகள் காந்திபுரம் மத்திய மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் ரேணுகாதேவி மற்றும் போலீசார் ஜான் ஜெபராஜ் மீது போஸ்கோ பிரிவில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதற்கு இடையே பாதிரியார் ஜான் ஜெபராஜ் தலைமறைவாகி விட்டார். அவரை பிடிக்க மாநகர போலீஸ் கமிஷனர் சரவணா சுந்தர் 3 தனிப்படைகள் அமைத்து உத்தரவிட்டார். தனிப்படை போலீசார் ஜான் ஜெபராஜ் நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, பெங்களூர் உள்ளிட்ட இடங்களில் தேடி வந்தனர். இதற்கு இடையே ஜான் ஜெபராஜ் முன் ஜாமின் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மனு தாக்கல் செய்தார்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் ஜான் ஜெபராஜ் தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவரை கோவை காந்திபுரம் மத்திய மகளிர் காவல் நிலையத்தில் வைத்து விசாரித்து வருகிறார்கள். இதனால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.