Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

நகை பிரியர்களுக்கு.. இரண்டாவது நாளாக தங்கம் விலை சரிவு!

By Christon
27 Feb 2026, 11:38 AM
சென்னையில் கடந்த சில நாட்களாக உயர்ந்து வந்த தங்கத்தின் விலை, இன்று இரண்டாவது நாளாகச் சற்றே குறைந்துள்ளது.
சர்வதேசச் சந்தையில் நிலவும் பொருளாதார மாற்றங்களுக்கு ஏற்ப, ஆபரணத் தங்கத்தின் விலை தினசரி அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த காலங்களில் ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சம் ரூபாயைக் கடந்து புதிய உச்சங்களை எட்டியதால், நகைப்பிரியர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்திருந்தனர். இந்நிலையில், நேற்றைய விலைச் சரிவைத் தொடர்ந்து இன்றும் தங்கம் விலை குறைந்திருப்பது கவனிக்கத்தக்கது.

தங்கம் விலை நிலவரம்

நேற்றைய நிலவரப்படி ஒரு கிராம் தங்கம் ரூ. 14,920-க்கும், ஒரு சவரன் ரூ. 1,19,360-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இன்று இரண்டாவது நாளாக விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது. அதன்படி, ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 20 குறைந்து, இன்று ரூ. 14,900-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் காரணமாக, ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 160 குறைந்து, இன்று ரூ. 1,19,200-க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலையில் மாற்றமில்லை

தங்கத்தின் விலை தொடர்ச்சியாக இரண்டாவது நாளாகச் சரிவைச் சந்தித்து வரும் நிலையில், வெள்ளியின் விலையில் எவ்வித மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே நீடிக்கிறது. அதன்படி, இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ. 295-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.