தமிழ்நாடு

ஜனநாயகத் தீர்ப்பைச் சிதைக்காதீர்: காங்கிரஸ் வெளியிட்ட காமராஜரின் 'ஏ.ஐ' வீடியோ!

By Christon
08 May 2026, 11:12 AM
தமிழக அரசியலில் ஆட்சி அமைப்பதில் நீடித்து வரும் இழுபறிக்கு மத்தியில், காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள ஒரு 'ஏ.ஐ' (AI) வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழக அரசியலில் ஆட்சி அமைப்பதில் நீடித்து வரும் இழுபறிக்கு மத்தியில், காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள ஒரு 'ஏ.ஐ' (AI) வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைப் பெற்றுத் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகம் (தவெக), காங்கிரஸ் கட்சியின் 5 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவுடன் 113 இடங்களைப் பெற்றுள்ளது. இருப்பினும், ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்கள் இல்லாததால் ஆளுநர் இதுவரை அழைப்பு விடுக்கவில்லை. இந்தத் தாமதத்தைக் கண்டித்து வரும் காங்கிரஸ் கட்சி, தற்போது ஒரு நவீனத் தொழில்நுட்ப உத்தியைக் கையாண்டுள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜர் பேசுவது போன்ற ஒரு 'ஏ.ஐ' வீடியோவை காங்கிரஸ் கட்சி தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில், "மக்கள் வழங்கிய ஜனநாயகத் தீர்ப்பின் அடிப்படையில் தான் தமிழ்நாடு அரசு அமைய வேண்டும். பின்வாசல் அரசியலாலோ அல்லது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதாலோ அரசு அமையக் கூடாது. தமிழக மக்களின் தீர்ப்பைச் சிதைக்க யாருக்கும் உரிமை இல்லை" என்று காமராஜர் கூறுவது போல் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்ற தவெக-வை ஆட்சி அமைக்க அழைக்காமல் காலம் தாழ்த்துவது அரசியல் துஷ்பிரயோகம் என்று காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.