தமிழ்நாடு

பி.எஸ்.4 வாகனங்கள் மோசடியாக பதிவு- தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

By Jayakumar
22 Mar 2025, 03:29 PM
மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன்  மோசடியாக வாகனங்கள் பதிவு செய்யப்பட்டது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

தமிழகத்தில் 2020ம் ஆண்டுக்கு பின், பி.எஸ்.4 வாகனங்கள் மோசடியாக பதிவு செய்யப்பட்டுள்ள விவகாரம் தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பி.எஸ். 4 ரக வாகனங்கள்

கடந்த 2017ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட பி.எஸ். 4 வாகனங்கள், 2020ம் ஆண்டு ஏப்ரலுக்கு பின் தடை செய்யப்பட்டன. இருப்பினும், 2020ம் ஆண்டுக்கு பின்னும் பி.எஸ். 4 ரக வாகனங்கள் மோசடியாக பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதுசம்பந்தமாக  விசாரிக்க உத்தரவிடக் கோரியும், சென்னையைச் சேர்ந்த தேவதாஸ்காந்தி வில்சன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

Read more: தொகுதி மறுசீரமைப்பு எதிர்ப்பு கூட்டம் திமுக நடத்தும் டிராமா- அண்ணாமலை விமர்சனம்

அவர் தனது மனுவில், தமிழகத்தில் பி.எஸ். 4 ரக வாகனங்கள் உள்பட 315 வாகனங்கள் மோசடியாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக, போக்குவரத்துத்துறை ஆணையர் தெரிவித்துள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.

அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

இந்த மோசடியில் வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் சம்பந்தப்பட்டுள்ளனர். இந்த முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை, லஞ்ச ஒழிப்புத்துறை அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை நியமித்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியுள்ளார்.

Read more: இந்தியாவுக்காக ஓரணியில் திரண்டுள்ளோம் - முதல்வர் மு.க. ஸ்டாலின் பேச்சு

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன்  மோசடியாக வாகனங்கள் பதிவு செய்யப்பட்டது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை மார்ச் 26ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.