தமிழ்நாடு

சிறுவன் கடத்தல் வழக்கு: ஜெகன் மூர்த்தி ஆஜர்...போலீஸ் குவிக்கப்பட்டதால் பதற்றம்

By Jayakumar
17 Jun 2025, 11:38 AM
கடத்தல் வழக்கு தொடர்பாக புரட்சி பாரத கட்சி தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி திருவாலங்காடு காவல் நிலையத்தில் விசாரணைக்காக ஆஜர்
திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு அடுத்த களாம்பாக்கம் பகுதியை சேர்ந்த தனுஷ் என்ற இளைஞர். இவர் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் வனராஜா என்பவரின் மகள் விஜயஸ்ரீ என்பவரை 3 ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ஏடிஜிபி கைது

இந்த விவகாரத்தில் தனுஷ்ஷின் தம்பி சிறுவனை ஏடிஜிபி வாகனத்தில் கடத்தப்பட்ட வழக்கில் ஏடிஜிபி ஜெயராமன் மற்றும் புரட்சி பாரதம் கட்சியின் தலைவரும், கே.வி.குப்பம் தொகுதியின் எம்.எல்.ஏ-வுமான ஜெகன் மூர்த்தி ஆகியோர் நேற்றைய தினம் சென்னை உயர்நீதிமன்றத்தில் இருவரையும் ஆஜரான நிலையில், ஏடிஜிபி ஜெயராமனை மட்டும் கைது செய்ய நீதிபதி உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இந்த உத்தரவை அடுத்து வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் நேற்று இரவு பலத்த போலீஸ் பாதுகாப்போடு திருவாலங்காடு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று அங்கு 6 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை ஆனது நடத்தப்பட்டு இருக்கிறது.

ஜெகன் மூர்த்தி ஆஜர்

பின்னர் அவரை திருத்தணி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில், தற்போது புரட்சி பாரத கட்சியின் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி திருவாலங்காடு காவல் நிலையத்தில் விசாரணைக்காக ஆஜராகி இருக்கிறார். இதனால் திருவாலங்காடு பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதால் இந்த பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.