Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தினை சார்ந்த 3 பேர் உயிரிழப்பு- முதல்வர் இரங்கல்

By MUTHUKRISHNAN
15 Apr 2025, 12:50 PM
விருதுநகர் மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தினை சார்ந்த 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், காரிசேரி கிராமத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி குறித்த அறிவிப்பினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுத்தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின் விவரம் பின்வருமாறு-

”விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், காரிசேரி கிராமம், வடக்குத் தெருவில் அமைந்துள்ள மாரியம்மன் கோவில் பொங்கல் மறுபூஜைக்காக நேற்று 14.4.2025 மாலை சுமார் 3.10 மணியளவில் ரேடியோ அமைக்கும் பணியின்போது அருகில் உள்ள டிரான்ஸ்பார்மர் வயரின் மீது மின்சார வயர் பட்டதில் ரேடியோ அமைக்கும் பணியை மேற்கொண்ட காரிசேரி கிராமத்தைச் சேர்ந்த திருப்பதி (வயத 27) த/பெ.ராமர் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், மேற்படி சம்பவம் இறந்த திருப்பதி வீட்டிற்கு அருகில் நிகழ்ந்ததால் அவருடைய மனைவி லலிதா (வயது 25) மற்றும் பாட்டி பாக்கியம் (வயது 75) ஆகியோர் திருப்பதியை காப்பாற்ற முயன்றபோது மேற்படி இருவர் மீதும் மின்சாரம் பாய்ந்ததில் அவர்களும் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

மேலும், இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.” என குறிப்பிட்டுள்ளார்.

Read more: வெள்ளியங்கால் ஓடையில் நீரில் மூழ்கி 3 சிறுவர்கள் உயிரிழப்பு..3 லட்சம் நிதியுதவி அறிவிப்பு