சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.13,675-க்கும், ஒரு சவரன் ரூ.1,09,400-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நேற்று முன்தினம் (அக்-3) தங்கம் விலை ஒரு கிராமுக்கு ரூ.100-ம், ஒரு சவரனுக்கு ரூ.800-ம் குறைந்திருந்த நிலையில், தற்போது அதே விலையில் தங்கம் நீடிக்கிறது.
தங்கத்தை தொடர்ந்து வெள்ளி விலையும் இன்று மாற்றமின்றி உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.245-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,45,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வாரத்தின் தொடக்க நாளில் தங்கம் மற்றும் வெள்ளி விலையில் உயர்வு இல்லாமல், முந்தைய விலையே தொடர்வது நகை வாங்க திட்டமிடுவோர் மற்றும் பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.