தமிழ்நாடு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 அதிகரிப்பு... நகை பிரியர்களுக்கு ஷாக்!

By Sumalekha
21 Aug 2026, 12:45 PM
சென்னையில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், இன்று (ஆகஸ்ட் 21) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.880 அதிகரித்துள்ளது. இதனால் ஒரு சவரன் தங்கம் ரூ.1,17,680-க்கும், ஒரு கிராம் ரூ.14,710-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது.

கடந்த 10-ந்தேதி சென்னையில் ஒரு கிராம் தங்கம் 'ரூ.13,950-க்கும், ஒரு சவரன் ரூ.1,11,600-க்கும்' விற்பனை செய்யப்பட்டது. அதன்பிறகு தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வந்தது.

கடந்த 18-ந்தேதி ஒரு கிராம் 'ரூ.14,290-க்கும், ஒரு சவரன் ரூ.1,14,320-க்கும்' விற்பனை செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது. சவரனுக்கு 'ரூ.1,600 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.1,16,800-க்கும்', கிராமுக்கு 'ரூ.200 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,600-க்கும்' விற்பனை செய்யப்பட்டது.

இன்றைய தங்கம் விலை:

இந்த நிலையில், இன்று தங்கம் விலை மேலும் உயர்ந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை "சவரனுக்கு ரூ.880 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.1,17,680-க்கு" விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், ஒரு கிராம் தங்கத்தின் விலை "ரூ.110 உயர்ந்து, ரூ.14,710-க்கு" விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை

தங்கத்தை தொடர்ந்து வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை "ரூ.5 அதிகரித்து ரூ.265-க்கு" விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிலோ வெள்ளியின் விலை "ரூ.10,000 உயர்ந்து ரூ.2,65,000"-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.