Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

By VASUKI
01 Apr 2025, 01:47 PM
தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில்  35–38° செல்சியஸ், தமிழக கடலோரப்பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 32–35° செல்சியஸ்,  மலைப் பகுதிகளில்  21–30° செல்சியஸ் பதிவாகியுள்ளது.
சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 1-2° செல்சியஸ்  குறைந்துள்ளது. ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில்  அதிகபட்ச வெப்பநிலையில் பொதுவாக பெரிய மாற்றம் ஏதுமில்லை. தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில்  அதிகபட்ச வெப்பநிலை பொதுவாக இயல்பை ஒட்டி இருந்தது.
   
மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில்  35–38° செல்சியஸ், தமிழக கடலோரப்பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 32–35° செல்சியஸ்,  மலைப் பகுதிகளில்  21–30° செல்சியஸ் பதிவாகியுள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் வடதமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது.
Read more : வழக்கறிஞர் கொலை வழக்கில் 2 பேர் கைது – விசாரணையில் பரபரப்பு வாக்குமூலம்
தமிழகத்தில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய  லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். நாளை மறுநாள் நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
வெப்ப நிலை  குறையக்கூடும்
01-04-2025 முதல் 05-04-2025 வரை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக  2 - 4° செல்சியஸ் வரை குறையக்கூடும். 01-04-2025 மற்றும் 02-04-2025: தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை பொதுவாக இயல்பை ஒட்டி-இயல்பை  விட சற்று குறைவாக இருக்கக்கூடும். 03-04-2025 முதல் 05-04-2025 வரை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில்  இயல்பை  விட   2- 3° செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.
 Read more: சர்ச்சைகளுக்கு நடுவில் வசூல் வேட்டை நிகழ்த்தும் ‘எம்புரான்’.. வெளியான லேட்டஸ்ட் அப்டேட்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று (ஏப்.1ம் தேதி ) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.அதிகபட்ச வெப்பநிலை  34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும்  இருக்கக்கூடும். நாளை (ஏப்.2ம் தேதி): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.