Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

By saravanakmr
15 Nov 2024, 07:33 PM
ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

தமிழகத்தில் இன்று ராமநாதபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட  7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு வெளியிட்ட அறிக்கையில், “ தமிழகத்தில்  ஒருசில இடங்களிலும்,   புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

நவ.16 மற்றும் 17ம் தேதியில் தமிழகத்தில்   ஒருசில இடங்களிலும்,  புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். நவ.18ம் தேதி தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.

நவ.19ம் மற்றும் 20ம் தேதி வரை தமிழகத்தில்   ஓரிரு இடங்களிலும்,  புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்களில்  அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு  மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில  பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்” என கூறப்பட்டுள்ளது.