Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

அக்காவை துடிதுடிக்க வெட்டிக்கொன்ற சகோதரர்- விருதுகரில் பரபரப்பு

By Jayakumar
03 Apr 2025, 08:49 AM
உடன் பிறந்த அக்காவை சகோதரர் அரிவாளால் வெட்டிக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

விருதுநகர் ஆத்துமேடு பகுதியைச் சேர்ந்தவர்  திருமணி(44). இவர் கணவன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இவருக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.

இடப்பிரச்னையில் சண்டை

இந்நிலையில் திருமணி அவரது தம்பி பெரியசாமி (42) வீட்டு அருகே உள்ள காலி இடத்தில் தரை வாடகைக்கு எடுத்து செட் போட்டு ஆடு கோழிகளை வளர்த்து வருகிறார். தனது வீட்டு அருகில் ஆடு கோழிகளை வளர்க்கக்கூடாது என்றும் அந்த இடத்தை காலி செய்து வேறு இடத்தில் சென்று நடத்துமாறு பெரியசாமி தனது அக்கா திருமணியிடம் அடிக்கடி கூறி சண்டையிட்டதாக கூறப்படுகிறது. 

Read more: சென்னையில் வழக்கறிஞர் கொலை வழக்கு – 2 பேர் சிறையில் அடைப்பு

சண்டையின்பொழுது திருமணியின் மகள் சண்டையை விலக்கிவிட்டு வந்துள்ளனர்.இது தொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் நடைபெற்று வந்ததாக கூறப்படுகிறது.

அக்காவை கொன்ற தம்பி

இந்நிலையில் நேற்று  இரவும் இதேபோல் இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடந்துள்ளது. திருமணியின் மகன்கள் இல்லாத நிலையில், அப்போது கடும் ஆத்திரமடைந்த பெரியசாமி மதுபோதையில் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து அக்கா திருமணியை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். 
இதில் திருமணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Read more: சென்னையில் பெய்த திடீர் மழை – ஜில்லென்று மாறிய வானிலை

தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். திருமணியின் சடலத்தை கைப்பற்றி உடற் கூறு ஆய்வுக்காக விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து விருதுநகர் கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இடபிரச்னை காரணமாக சொந்த அக்காவை தம்பி சரமாரியாக வெட்டிக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.