தமிழ்நாடு

ஆவடி அருகே கால்பந்து கோல் போஸ்ட் விழுந்து சிறுவன் பலி

By VASUKI
01 Feb 2025, 11:04 AM
கால்பந்து விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மீது எதிர்பாராத விதமாக இரும்பு கோல் போஸ்ட் தலை மீது விழுந்ததில் சிறுவன் உயிரிழந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

ஆவடி அடுத்த முத்தா புதுப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ். இவரது மகன் ஆட்விக் (7). ஆவடி விமானப்படை பள்ளியில் 2ம் வகுப்பு பயின்று வந்தார். அட்விக் இந்திய விமானப்படை குடியிருப்பில் உள்ள மைதானத்தில் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது கால்பந்து இரும்பு கோல் போஸ்ட், எதிர்பாராத விதமாக சிறுவனின் தலை மீது விழுந்துள்ளது. 

இதில் தலையில் சிறுவன் பலத்த காயமடைந்து மயங்கி விழுந்தார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் உடனடியாக சிறுவனை மீட்டு போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். 

இதுகுறித்து தகவல் அறிந்து சென்ற முத்தா புதுப்பேட்டை போலீசார், சிறுவனை உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மைதானத்தில் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மீது இரும்பு கோல் போஸ்ட் விழுந்ததில், அச்சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.