தமிழ்நாடு

பாஜகவில் இணைந்த பிரபல நடிகை கஸ்தூரி மற்றும் நமிதா மாரிமுத்து.. பூங்கொத்து கொடுத்து வரவேற்ற நயினார் நாகேந்திரன்!

By VASUKI
15 Aug 2025, 03:27 PM
பிரபல நடிகை கஸ்தூரி மற்றும் சமூக ஆர்வலரான திருநங்கை நமிதா மாரிமுத்து ஆகிய இருவரும் இன்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் இன்று பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளனர்.
தியாகராய நகரில் உள்ள பா.ஜ.க அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சட்டமன்ற உறுப்பினரும் பா.ஜ.க மூத்த தலைவருமான நயினார் நாகேந்திரன் முன்னிலையில் நடிகை கஸ்தூரியும், திருநங்கை நமிதா மாரிமுத்துவும் கட்சியில் இணைந்தனர். அவர்கள் இருவரும் முறைப்படி பா.ஜ.க-வின் உறுப்பினர் அட்டையைப் பெற்றுக்கொண்டனர்.

சினிமா மற்றும் சமூக வலைதளங்களில் துணிச்சலான கருத்துக்களுக்காக அறியப்பட்ட நடிகை கஸ்தூரியின் அரசியல் பிரவேசம், தமிழக பா.ஜ.க-வுக்கு ஒரு கூடுதல் சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், திருநங்கை சமூகத்தின் பிரதிநிதியாக நமிதா மாரிமுத்து கட்சியில் இணைந்துள்ளது, சமூக ரீதியான ஆதரவு தளத்தைப் பா.ஜ.க விரிவுபடுத்தும் விதமாகப் பார்க்கப்படுகிறது.

இதுதொடர்பாகத் தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது,

நடிகை திருமதி.க ஸ்தூரி அவர்களும், நடிகையும், சமூக செயற்பாட்டாளரும், Namis South Queen India நிறுவனத்தின் தலைவருமான திருநங்கை நமிதா மாரிமுத்து அவர்களும் இன்று சென்னை பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் தமிழ்நாடு பாஜக கலை மற்றும் கலாச்சார பிரிவுத் தலைவர் பெப்சி சிவா அவர்களின் முன்னிலையில், பாஜகவில் இன்று இணைந்தனர்.

சமூக செயல்பாட்டாளரான திருமதி.கஸ்தூரி அவர்களும் நமீதா மாரிமுத்து அவர்களும் இன்று முதல் அதிகாரப்பூர்வமாக அரசியல் பயணத்தில் இணைந்திருப்பது வரவேற்கத்தக்கது. அவர்களுடைய அரசியல் பயணம் தமிழ்நாடு பாஜகவில் தொடங்கி இருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.