தமிழ்நாடு

”WE THE LEADERS இயக்கத்தை சரியான பாதையில் கொண்டு செல்வேன்”... - அண்ணாமலை

By Sumalekha
17 Jun 2026, 03:14 PM
WE THE LEADERS இயக்கத்தில் 50 லட்சம் உறுப்பினர்களை இணைத்த பிறகு அரசியலுக்கு வர வேண்டுமா என்பது குறித்து மக்களிடம் கருத்துக் கேட்கப்படும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.ஜூலை முதல் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் கூறியுள்ளார்.
“WE THE LEADERS” இயக்கத்தை தொடங்கிய அண்ணாமலை வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில் என்னுடன் வருமாறு பாஜகவினர் யாருக்கும் அழைப்பு விடுக்கவில்லை: எனது இயக்கத்திற்கு தாமாக இளைஞகள் வர வேண்டுமென எதிர்பார்த்தேன்.

வீ தி லீடர்ஸ் வெப்சைட் வெளிப்படைத் தன்மையுடன் இருக்கும். அதில் 50 லட்சம் உறுப்பினர்களை இணைந்தவுடன் மக்களிடம் நாம் அரசியலுக்கு வர வேண்டுமா என கருத்து கேட்போம். அதுவரை நாம் இலக்குடன் செயல்படுவோம்.

மக்களின் அன்றாடப் பிரச்சினைகள் குறித்து நாம் பேச வேண்டும். மக்களின் அன்றாட வாழ்க்கை, விவசாயம், உணவுப் பொருட்கள், சுகாதாரமற்ற காற்று ஆகியவை குறித்துப் பேச வேண்டும். எந்தக் கட்சிகளும் இது பற்றி பேசுவது கிடையாது.

”WE THE LEADERS” இயக்கத்தை சரியான பாதையில் கொண்டு செல்வேன்: இந்த இயக்கம் கட்சியாக மாறினால் இதன் தன்மை வேறு மாதிரி இருக்கும் ஜூலை முதல் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

"We the leader-ல் ஆயிரக்கணக்கானவர்கள் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளனர். லட்சக்கணக்கானவர்கள் தேர்தலில் போட்டியிட விருப்பம் இல்லை” என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழக அரசியலில் என்ன மாற்றத்தை செய்யப் போகிறார் என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்.