Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

நிதி நிறுவன கடன் தொல்லையால் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை..! 

By VASUKI
24 Feb 2025, 09:27 AM
நிதி நிறுவன கடன் தொல்லையால், தன்னுடைய சாவுக்கு காரணம் இவர்கள் தான் என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அடுத்த  வேப்பூர் பகுதிக்குட்பட்ட சேப்பாக்கம் ஊராட்சியில் சுகன்யா மற்றும் வெங்கடேசன் ஆகிய  இவர்களுக்கு திருமணம் ஆகி 18 ஆண்டுகள் ஆகிறது. 

இவர்களுக்கு பிரியதர்ஷினி என்கின்ற 15 வயது மகளும், பிரவீன் குமார் என்கிற 13 வயது மகனும் உள்ளனர். 

இந்நிலையில், மகளிர் சுய உதவி குழு உள்ளிட்ட நான்கு தனியார் நிதி நிறுவனம் மூலம்,  நான்கு லட்சம் ரூபாய் அளவு கடனாக பெற்று அவற்றை அக்கிராமத்தைச் சேர்ந்த சுமதி,  பாலாஜி என்பவருக்கு கொடுத்துள்ளார். 

வாங்கி கொடுத்த கடன் தொகையை சுமதி, பாலாஜி என்பவர் சரிவர கட்டவில்லை என தெரிகிறது. இந்நிலையில் சுமதி,  பாலாஜி ஆகிய இருவரும் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது. 

கடன் தொகையை திரும்பி செலுத்த,  நிதி நிறுவன ஏஜெண்டுகள்,  சுகன்யா வீட்டிற்கு தினந்தோறும் வந்து,  வாங்கி கொடுத்த லோனை நீங்கள் தான் கட்ட வேண்டும் என்று கட்டாயப்படுத்தி வந்ததாக தெரிகிறது. 

இதனால் விரக்தி அடைந்த சுகன்யா நேற்று இரவு தனது வீட்டில்,  எனது சாவிற்கு எனது குடும்பம் காரணம் இல்லை என்றும்,  லோன் வாங்கிவிட்டு கட்டாத, சுமதி தான் என் சாவுக்கு  காரணம் என்று கடிதம் எழுதி வைத்து விட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து சுகன்யாவின் உறவினர்கள் வேப்பூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். இது சம்பந்தமாக வேப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.