கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து சரிந்து வந்த தங்கத்தின் விலை, நேற்று அதிரடியாக உயர்ந்ததைத் தொடர்ந்து, இன்றும் மேலும் அதிகரித்து நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 10-ஆம் தேதி சவரனுக்கு ரூ.3,200-ம், அதற்கு அடுத்த நாள் மேலும் ரூ.2,400-ம் சரிந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.1,08,000 என்ற அளவிற்கு வீழ்ச்சியடைந்தது. இதனால் விலை மேலும் குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நேற்று அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகச் சவரனுக்கு ஒரே நாளில் ரூ.2,400 அதிரடியாக உயர்ந்தது. நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.13,800-க்கும், ஒரு சவரன் ரூ.1,10,400-க்கும் விற்பனையான நிலையில், அந்த விலை உயர்வு இன்றும் தொடர்ந்து நீடிக்கிறது.
தங்கம் விலை நிலவரம்
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.60 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.13,860-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் சவரனுக்கு மேலும் ரூ.480 அதிகரித்து, இன்று ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.1,10,880 என்ற புதிய உச்சத்தைத் தொட்டு விற்பனையாகி வருகிறது.
வெள்ளி விலை
தங்கத்தின் விலையைப் போலவே வெள்ளியின் விலையும் இன்று ஏறுமுகமாகவே உள்ளது. அதன்படி, வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.270-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை ரூ.2,70,000 ஆக அதிகரித்துள்ளது.