தமிழ்நாடு

17 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு!

By Christon
18 May 2026, 05:46 PM
17 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு இன்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழ்நாட்டில் புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், நிர்வாகப் பணிகளை விரைவுபடுத்தும் நோக்கில் 17 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு இன்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசு, முக்கிய ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றப் பட்டியலை வெளியிட்டுள்ளது. சத்ய பிரதா சாகு, அமுதா, ககன் தீப் சிங் பேடி உள்ளிட்ட முக்கிய மூத்த அதிகாரிகள் பலருக்குப் புதிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் அரசுத் துறைகளின் செயல்பாடுகள் மேலும் வேகம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை மாநகராட்சி மற்றும் நகராட்சி நிர்வாகம்

சென்னை மாநகராட்சியின் புதிய ஆணையராக சமீரன் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல், நகராட்சி நிர்வாகத்துறையின் புதிய செயலாளராக மூத்த அதிகாரி ககன் தீப் சிங் பேடி ஐ.ஏ.எஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மாநகராட்சி மற்றும் நகராட்சி உள்கட்டமைப்புப் பணிகளை மேம்படுத்தும் நோக்கில் இந்த நியமனங்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றன.