தமிழ்நாடு

சோளிங்கரில் 10ம் வகுப்பு மாணவி குத்திக்கொலை-படுகாயத்துடன் மற்றொரு மாணவி அனுமதி

By Jayakumar
28 May 2025, 08:27 PM
சோளிங்கரில் வீட்டில் இருந்த 10ம் வகுப்பு மாணவி ஒருவர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அருகே புலிவலம் சந்தை மேடு பின்புறம் பகுதியில் வசித்து வருபவர் ஜெயக்குமார். இவருடைய மகள் பத்தாம் வகுப்பு மாணவி. இவர் வீட்டில் இருந்தபோது மர்ம நபர் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.

மாணவி கொலை

இதனை தடுக்க வந்த அவருடைய உறவினரான பதினொன்றாம் வகுப்பு மாணவியையும் மர்ம நபர் கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு அருகிலுள்ள சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தற்போது இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.எதற்காக மர்ம நபர் இதை செய்தார். கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

போலீஸ் விசாரணை

மேலும் இந்த கோர சம்பவத்திற்கு காதல் பிரச்னையாக இருக்கலாம் என பல்வேறு தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து கொண்டபாளையம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவல்துறையினரின் தீவிர விசாரணைக்கு பின்னர் கொலைக்கான காரணம் என்ன என்பது தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.