விளையாட்டு

CSK ஃபேன்ஸுக்கு சிறப்பான Surprise.. மஞ்சள் உடையில் களமிறங்கும் தரமான ALL-ROUNDERS!

By Christon
05 Nov 2026, 04:10 PM
நாதன் எல்லீஸ், கலீல் அகமதுக்குப் பதிலாக லியாம் லிவிங்ஸ்டன், ஜேக் எட்வர்ட்ஸ் சிஎஸ்கே அணியில் இணைந்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் 2027 சீசனுக்கான மினி ஏலத்திற்கு முன்பாக, சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் இடையே வீரர்களைப் பரிமாறிக்கொள்ளும் டிரேடிங் முறை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹைதராபாத் அணியில் விளையாடி வந்த இங்கிலாந்து ஆல்ரவுண்டர் லியாம் லிவிங்ஸ்டன் (33) ரூ.6 கோடிக்கும், ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் ஜேக் எட்வர்ட்ஸ் (26) ரூ.3 கோடிக்கும் சிஎஸ்கே அணிக்கு மாற்றப்பட்டுள்ளனர். அணியில் ஒரு ஸ்பின் ஆல்ரவுண்டர் தேவைப்பட்டதாலும், நட்சத்திர வீரர் ஜேமி ஓவர்டனுக்கு மாற்று வீரர் தேவைப்பட்டதாலும் இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

மறுபுறம், சிஎஸ்கே அணியின் வேகப்பந்துவீச்சாளர்களான கலீல் அகமது (ரூ.4.8 கோடி) மற்றும் நாதன் எல்லீஸ் (ரூ.2 கோடி) இருவரும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு டிரேட் செய்யப்பட்டுள்ளனர்.

வீரர்களின் திறமை மட்டுமல்லாமல், நிர்வாகத்திற்கும் வீரர்களுக்கும் இடையேயான கருத்து வேறுபாடுகளும் இந்த மாற்றத்திற்குக் காரணமாகப் பார்க்கப்படுகின்றன. கலீல் அகமது முன்பே தன்னை அணியிலிருந்து விடுக்குமாறு கோரியிருந்ததும், நாதன் எல்லீஸ் கடந்த சீசனில் காயம் எனக் கூறி விலகியதும் சிஎஸ்கே நிர்வாகத்திற்கு இடையே முரண்பாடுகளை ஏற்படுத்தியிருந்ததாக கூறப்படுகிறது.

கலீல் அகமதுக்கு மாற்றாக முகேஷ் சௌத்ரி அணியில் இருப்பதால், சிஎஸ்கே நிர்வாகம் இந்த முடிவை எளிதாக எடுத்துள்ளதாகத் தெரிகிறது.

தற்போது சிஎஸ்கே அணியில் இணைந்துள்ள இங்கிலாந்தைச் சேர்ந்த ஆல்ரவுண்டர் லியாம் லிவிங்ஸ்டன் 100 சர்வதேச போட்டிகளில் 1,500-க்கும் அதிகமான ரன்கள் குவித்துள்ளார். ஐபிஎல் தொடரில் 51 போட்டிகளில் 1000 ரன்களுக்கும் அதிகமாக, 155 ஸ்டிரைக் ரேட்டில் விளையாடியுள்ளார்.

அதேபோல், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆல்ரவுண்டர் ஜேக் எட்வர்ட்ஸ் டி20 கிரிக்கெட்டில் 865 ரன்கள், 58 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். முதல்தர போட்டிகளில் 2,500 ரன்கள், 4 சதங்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.