Kumudam News 24 X 7 AMP Article
அரசியல்

கட்சியில் இருந்து விலகிய சம்பாய் சோரன்.. அடுத்து பாஜகவில் இணைகிறாரா? காரணம் இதுதான்..

By leninakathiya
19 Aug 2024, 02:48 AM
பாஜகவில் இணையப்போவதாக வெளியான தகவலையடுத்து, ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியிலிருந்து சம்பாய் சோரன் விலகுவதாக அறிவித்துள்ளத ஜார்க்கண்ட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் சம்பாய் சோரன். நில மோசடி வழக்கில் ஹேமந்த் சோரன் தனது முதல்வர் பதவியை ஜனவரி 31ம் தேதி ராஜினாமா செய்தார். அவர் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டிருந்தார்.

இதனால் தன்னுடைய தந்தைக்கு நெருங்கிய நண்பராக இருந்த சம்பாய் சோரன் பிப்ரவரி 2ம் தேதி முதல்வராக நியமிக்கப்பட்டார். பின்னர் ஜூன் 28ம் தேதி ஹேமந்த சோரன் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இதனால் மீண்டும் ஜூலை 4ம் தேதி முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார் ஹேமந்த்.

இதனால், சம்பாய் சோரன் ஹேமந்த சோரன் அமைச்சரவையில் நீர்வளத் துறை அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். இதனால் சம்பாய் சோரன் முதல்வர் பதவியில் இருந்து நீக்கப்பைட்டதால் அவர் அதிருப்தியில் இருப்பதாவும், ஹேமந்த சோரன் கைதாகியிருந்த போது சம்பாய்-க்கும் அவருக்கும் பல கருத்து வேறுபாடுகள் இருந்ததாகவும், இதனால் பாஜகவில் அவர் இணைய இருப்பதாகவும் தகவல்கள் பரவியது. ஆனால் இந்த தகவல்களை மறுத்தார் சம்பாய்.

இந்நிலையில், ஜார்க்கண்டில் ஆளும் முக்தி மோர்ச்சா கட்சியின் 6 எம்.எல்.ஏக்களுடன் சம்பாய் சோரன் டெல்லிக்கு விசிட் அடித்தார். இதனால் சற்றே அடாங்கியிருந்த வதந்திகள் மீண்டும் பேசுபொருளாக மாறியது. டெல்லியில் சம்பாய் சோரன் பாஜகவின் முக்கிய தலைவர்களை சந்தித்து, அக்கட்சியில் இணை இருப்பதாக பேசப்பட்டது.

இதனிடையே, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் போஸ்டர்களில் இருந்து சம்பாய் சோரனின் புகைப்படங்கள் நீக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால், தற்போது கட்சியில் தான் அவமதிக்கப்பட்டதாக கூறி ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார் சம்பாய் சோரன். மேலும், தனக்கு அனைத்து வழிகளும் திறந்தே இருக்கிறது எனவும் அவர் மறைமுகமாக தெரிவித்துள்ளார்.

இதன்மூலம், சம்பாய் சோரன் பாஜகவில் இணைவாரா அல்லது வேறு ஏதேனும் கட்சியில் இணைவாரா என்ற பரபரப்பான சூழல் ஜார்க்கண்டில் நிலவி வருகிறது. 

சோரன் குடும்பத்திற்கு மிக நெருக்கமாக இருந்தவர் தான் சம்பாய் சோரன். ஹேமந்த சோரனின் தந்தை ஷிபு சோரனுக்கு ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சிக்கு சம்பாய் சோரன் ஆற்றிய பணிகள் ஏராளம். ஜார்கண்டின் புலி என பரவலாக அழைக்கப்படும் சம்பாய் சோரன், ஷிபு சோரனுக்கு ஹனுமான் எனவும் அழைக்கப்பட்டிருக்கிறார்.

இப்படி முதிர்ச்சியான அரசியல் தலைவர் ஒருவர் ஜார்க்கண்ட் முக்தி மோர்சா கட்சியில் இருந்து விலகியுள்ளது அக்கட்சிக்கே பின்னடைவு என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்.