அரசியல்

நல்வரவு - நல்லுறவு; தேமுதிகவை வரவேற்று முதல்வர் ஸ்டாலின் பதிவு!

By Christon
19 Feb 2026, 11:29 AM
நல்வரவு - நல்லுறவு தொடர்ந்து தமிழ்நாட்டின் உயர்வுக்குப் பங்களிக்கட்டும் என்று திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்திருப்பதை முதல்வர் ஸ்டாலின் வரவேற்றிருக்கிறார்.
நல்வரவு - நல்லுறவு தொடர்ந்து தமிழ்நாட்டின் உயர்வுக்குப் பங்களிக்கட்டும் என்று திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்திருப்பதை திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் வரவேற்றிருக்கிறார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுக தலைவரை சந்தித்தனர் தேமுதிக பொதுச் செயலர் பிரேமலதா மற்றும் பொருளாளர் சுதீஷ் ஆகியோர். சந்திப்புக்குப் பின் கூட்டணி உறுதி செய்யப்பட்டது.

இந்த நிலையில், மு.க. ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் தேமுதிகவை வரவேற்று பதிவிட்டுள்ளார்.

அதில், "முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் மேல் மாறாத அன்பு கொண்டவரும், எனது அன்பு நண்பருமான ‘கேப்டன்’ விஜயகாந்த் உருவாக்கிய தேசிய முற்போக்கு திராவிட கழகம், இன்று மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இணைந்திருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது.

சகோதரர் கேப்டன் உருவாக்கிய இயக்கத்தைத் தற்போது திறமையாக வழிநடத்தி வரும் பொதுச்செயலாளர் அன்புச் சகோதரி பிரேமலதா விஜயகாந்தையும், அக்கட்சியின் நிர்வாகிகளையும் வருக வருக என வரவேற்கிறேன்.

கருப்பு சிவப்பைக் கொடியில் தாங்கியிருக்கும் தங்களது நல்வரவு - நல்லுறவு தொடர்ந்து தமிழ்நாட்டின் உயர்வுக்குப் பங்களிக்கட்டும். திராவிட மாடல் ஆட்சி தொடரவும், தமிழ்நாடு அனைத்து வகையிலும் முன்னேறவும் இணைந்து பயணிப்போம்" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.