அரசியல்

தேர்தல் சமயத்தில் கூட்டணியில் யார் யார் இருப்பார்கள் தெரியும் - எடப்பாடி பழனிசாமி

By VASUKI
29 Jul 2025, 12:24 PM
சட்டமன்ற தேர்தல் நெருங்கும்போது அதிமுக கூட்டணியில் யார் யார் இருப்பார்கள் எனத் தெரியும் திருச்சியில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தில் எழுச்சி பயணத்தை மீண்டும் தொடர்வதற்காகச் சென்னையிலிருந்து திருச்சி விமான நிலையத்திற்கு வருகை தந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு திருச்சி மாவட்ட அதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,

சிவகங்கை மாவட்டத்தில் எழுச்சி பயணத்தைத் தொடர உள்ளதாகவும், இதுவரை 49 சட்டமன்ற தொகுதி பயணம் சென்றுள்ளதாகவும் கூறினார். இனிவரும் காலங்களில் தூத்துக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் எழுச்சி பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்தார்.

கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் கடன் பெற முடியாமல் சிரமம் இருந்தது. இதுகுறித்து விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். சிவில் முறை பாதிப்பை ஏற்படுத்தும் எனவும், பழைய முறையை அமல்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர். இதுகுறித்து பிரதமரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளோம். அதனைச் சரி செய்வதாகக் கூறியுள்ளார். அதன் பின்னர் அனைத்து கூட்டுறவு வங்கிகளிலும் சுற்றறிக்கை விடப்பட்டுள்ளது. பழையபடி வங்கியில் கடன் பெறலாமெனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கூட்டணிபற்றிய கேள்விகளுக்குப் பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, எந்தக் கட்சியோடு, எந்தக் கட்சி கூட்டணி சேருகிறது என அவர்களிடம் தான் கேட்க வேண்டும் என்றும், யூகங்களுக்குப் பதில் சொல்ல முடியாது என்றும் தெரிவித்தார்.

வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடுகுறித்து மத்திய அரசு கூறியது குறித்து, பத்திரிக்கையாளர்களான உங்களுக்கே தெரியும். இது செய்தியை விறுவிறுப்பாக வேண்டாம். பரபரப்புக்காகக் கேள்வி கேட்க வேண்டாம். அது முடிந்து போன விஷயம். இந்த உலகத்தில் இந்தியா முழுவதும் மத்திய அரசு ஒரு நிலைப்பாட்டை எடுத்துள்ளதாகக் கூறினார்.

1976 ஆண்டிலிருந்து மத்திய பொது பட்டியலிலிருந்து ஏன் மாநில பட்டியலுக்கு மாற்றவில்லை. அப்போதைய திமுக, பாஜக கூட்டணியில் இருக்கும்போது என்ன செய்தார்கள். அதன் பின்னர் காங்கிரஸ் கூட்டணியில் திமுக இருக்கும்போது என்ன செய்தார்கள் என்று கேள்வி எழுப்பினார்.

தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் இருக்கிறது. அதிமுக தலைமையில் பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் இருக்கின்றன. தேர்தல் வரும்போது யார் யார் கூட்டணியில் இருப்பார்கள் எனத் தெரியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.